மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட, அரசு காலணி, வசந்தம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி கலைவாணி வயது 43. இவர் கடந்த ஒரு வருட காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆயினும் அவருக்கு குணமாகவில்லை. இதனால், விரக்தி அடைந்த மனநிலையில் வாழ்ந்து வந்த கலைவாணி, ஏப்ரல் 23ஆம் தேதி காலை 8:30 மணி அளவில், வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே, இது குறித்து கலைவாணியின் மகன் சந்தோஷ் குமார் வயது 26 என்பவர், அளித்த புகாரி பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கலைவாணி அருகில் உள்ள வசந்தம் நகர் அம்மையப்பர் மணியர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. எனவே, உயிரிழந்த கலைவாணியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.