பூண்டி வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
தூர்வாரும் பணி துவக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 689 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.10.43 கோடியில் 689 பணிகள் நடைபெற உள்ள நிலையில், நாகங்குடி கிராமத்தில் தூர்வாரும் பணியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி 2024- 25-ஆம் ஆண்டுக்கான சிறப்பு தூர்வாரும் பணிகளுக்காக டெல்டா மாவட்டங்கள் மற்றும் 13 மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டம் ரூ.110 கோடியில் செயலகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 27ஆம் தேதி சென்னை சென்னையில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 68 பணிகள் 689 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ 10.43 கோடியில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஒன்றியம் நாகங்குடி கிராமத்தில் பூண்டி வாய்க்காலில் நடைபெற்ற சிறப்பு தூர்வாரும் பணியை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். இந்த பணி செயலகம் செய்யப்படுவதன் மூலம் மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள 2 லட்சத்து 202389 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story