மாசாணியம்மன் கோவிலில் மலேசியா நாட்டு அமைச்சர் சாமி தரிசனம்
மாசாணியம்மன் கோவிலில் மலேசியா நாட்டு ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சாமி தரிசனம் செய்தார்.
பொள்ளாச்சி:நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சரஸ்வதி கந்தசாமி மலேசியா நாட்டில் ஒருமைப்பாட்டு துறை அமைச்சராக உள்ளார்.இவர் தனது குடும்ப உறவினர்களுடன் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு இன்று வருகை புரிந்தார்.அவரை கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் மஞ்சுளாதேவி,தங்கமணி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மாசாணியம்மனை வழிபட்டார்.
பின்னர் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற நீதி கல் வழிபாடு,மிளகாய் அரைத்தல்,தங்கத் தேர், கோயில் வரலாறு ஆகியன குறித்து அர்ச்சகர்களிடம் கேட்டறிந்தார்.மலேசியா நாட்டு அமைச்சர் மாசாணி அம்மன் கோயிலுக்கு வருவதை முன்னிட்டு ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story