சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பரம்பிக்குளம் அணை புதுப்பிக்கும் பணியை ஆய்வு..

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணையான பரம்பிக்குளம் அணையின் மதகுகள் புதுப்பிக்கும் பணியை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு.
தமிழகம் முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.பெரும்பாலான அணைகளில் கோடைக்காலத்தின் போது மதகுகளை சீரமைக்கும் பணிகள் மற்றும் புதுப்பிக்கும் மணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணையான பரம்பிக்குளம் அணையின் மதகு கடந்த ஆண்டு ஏற்பட்ட உடைப்பு காரணமாக பரம்பிக்குளம் அணையின் மதகுகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த அணையின் பராமரிப்பு பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பரம்பிக்குளம் அணைக்கு நேரில் சென்று அணையின் நீர் இருப்பு குறித்த கேட்டறிந்தார் மேலும் பரம்பிக்குளம் அணையில் மதகுகளை புதுப்பிக்கும் பணியை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story