எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையை ஒருமையியல் பேசியதால் பரபரப்பு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் திமுக சார்பில் ஈஸ்வரசமி , அதிமுக சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தீரின் சரண்யா அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தனர்.
அதிமுகவுக்கு மதியம் 12 முதல் ஒரு மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது ஆனால் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி திமுக கட்சி நிர்வாகிகளுடன் முன்னதாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து அமர்ந்திருந்தனர்.
வெளியே காத்திருந்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன்,உடுமலை ராதாகிருஷ்ணன் கிணத்துக்கடவு தாமோதரன் அமுல் கந்தசாமி ஆகியோர் நேரம் ஆனதால் ஆவேசம் அடைந்தனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்து நேரம் ஆயிடுச்சு என கூறி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் முறையிட்டார் உள்ளே வரும் பொழுது உளவு பிரிவு போலீசார் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை தடுத்ததால் ஆவேசமான பொள்ளாச்சி ஜெயராமன் யாரப்பா நீ ஏ தடுக்குற நீ முதலில் தள்ளி நில்லு என ஆவேசமாக பேசியதால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த இடத்தில் போலீசாரை ஒருமையில் பேசியதால் மற்ற காவல் துறையினர் மத்தியில் முகசுழிப்பையும் ஏற்படுத்தியது.
பின்பு சார் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்ற வேட்பாளர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்..