பொன்னேரி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு செய்த எம்எல்ஏவிடம், போதிய இடவசதி இல்லை என டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அங்குள்ள நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் மருத்துவமனையில் ஜெனரேட்டர் முறையாக செயல்படாததால் மின்தடை நேரத்தில் பிரசவ வார்டுகளில் உள்ள குழந்தைகள் தாய்மார்கள் தொடர்ந்து சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மருத்துவமனையினை ஆய்வு நோயாளிகளின் படுக்கைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார் அப்போது மருத்துவர்கள் இட நெருக்கடியாக உள்ளதால் கூடுதலாக இட வசதியை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் இதில் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மருத்துவர் அனுரத்னா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story