மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மிதமான மழை

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில்  நள்ளிரவில் மிதமான மழை

மழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த இரண்டு தினங்களாக, மழை பொழியவில்லை.சம்பா, தாளடி பயிர் செய்திருந்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டத்தில், விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை மயிலாடுதுறை மாட்டத்தில், மயிலாடுதுறை 3.1, மணல்மேடு 3.1 , சீர்காழி 0.58 , கொள்ளிடம் 3.98 , தரங்கம்பாடி 3.40 , செம்பனார்கோவில் 0.78 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, மாவட்டத்தில் சராசரியாக 2.43 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story