முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த கண்காணிப்பு குழுக் கூட்டம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த கண்காணிப்பு குழுக் கூட்டம்

ஆய்வு கூட்டம் 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு,துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் திட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும், உணவு பொருட்களின் தரம், உணவு சுவையாக உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் , சமையல் தொடங்கும் நேரம், முடிக்கப்பட்ட நேரம், பரிமாறப்பட்ட நேரம் உணவு வழங்கப்பட்ட விவரங்களை செயலியில் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாணவர்களின் வருகை, சமையல் பொறுப்பாளர்கள், தளவாடப் பொருட்கள், உணவுப் பொருட்கள் இருப்பு விவரம், வரவு செலவு விபரங்கள், சிறப்பு பார்வையாளர் ஆகிய பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது செயல்பாடுகள் குறித்த குறிப்பேடுகளை பதிவேடுகளில் பதிவிட்டு இருக்க வேண்டும். காலை உணவு திட்டம், சத்துணவு மையங்களில் எரிவாயு உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காலை உணவு திட்டம் மையம், சத்துணவு மையங்களில் உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் பொழுது முழுமையாக கண்காணித்திட வேண்டும். இக்கண்காணிப்பு பணியினை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story