மயிலாடுதுறையில் ரூ.592 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மயிலாடுதுறையில் ரூ.592 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் 

மயிலாடுதுறையில் தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், 52 பயனாளிகளுக்கு, 592 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, மானியத்துடன் கூடிய கடனுதவியினை வழங்கினார். இவ்விழாவில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். படித்த இளைஞர்களுக்கு, அடுத்த கட்ட வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், உலக முதலீட்டாளர்கள் திட்டம், துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். . இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story