ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கி எம்.பி ஜோதிமணி வாழ்த்து

பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது தொகுதி மேம்பாட்டு உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை 6 பயனாளிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஸ்கூட்டர்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

Tags

Next Story