நகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூன்று கட்ட போராட்டம் நடத்த முடிவு !

நகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூன்று கட்ட போராட்டம் நடத்த முடிவு !

போராட்டம் நடத்த முடிவு

கரூரில், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூன்று கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கரூரில், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூன்று கட்ட போராட்டம் நடத்த முடிவு. தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று PLA ராம் ரெசிடென்சி ஹோட்டலில்,மாநில ஒருங்கிணைப்பாளர்முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே ஐவன் சரவணன், பன்னீர்செல்வம், சத்தியமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர்கள் கே.வெங்கிடுசாமி, மு.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். செயல்திறன்னற்ற பணியாளர்களுக்கு 5200 - 1900 தர ஊதியம் வழங்கிட வேண்டும். பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.

புதிய பணி விதிகளை மாறுதல் செய்திட வேண்டும். ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மாநகர சுகாதார செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். நகராட்சி வருவாய்க்கேற்ப தரம் உயர்த்த வேண்டும். புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 25 அன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது. ஆகஸ்ட் 8 அன்று அனைத்து நகராட்சி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது. செப்டம்பர் 13 அன்று நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

Tags

Next Story