பாஜ., வேட்பாளருக்கு வரவேற்பு அளித்த இஸ்லாமிய பெண்கள்

கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜ., வேட்பாளர் செந்தில்நாதனுக்கு, இஸ்லாமிய பெண்கள் வரவேற்பு அளித்தனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கரூர் பாராளுமன்ற வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கரூர் சட்டமன்ற தொகுதி மட்டும் நகர பகுதியாக உள்ளது. கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை சட்டமன்ற தொகுதிகள் கிராமப் பகுதிகள் உள்ளடங்கிய பகுதியாக உள்ளது.

கிராமப் பகுதிகள் முதல் சுற்று பிரச்சாரத்தை முடித்த அவர், கரூர் மாநகராட்சி பகுதியில் இன்று தனது பிரச்சாரத்தை அண்ணா நகர் பகுதியில் துவக்கினார். இதனைத் தொடர்ந்து பனையடியான் கோவில், பாரதியார் தெரு, படிக்கட்டு துறை, மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோவில் தெரு, மாவடியான் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளான அமமுக மாவட்ட தலைவர் தங்கவேல், பாமக மாவட்ட செயலாளர் சுரேஷ், தமாகா மாவட்ட செயலாளர் சூரியமூர்த்தி, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

வேட்பாளர் செந்தில்நாதனுக்கு தாமரை மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள், செந்தில் நாதனுக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது இஸ்லாமிய பெண்களும் ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த பெண்களிடையே பேசிய வேட்பாளர் செந்தில்நாதன் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் எனக்கு தாமரை சின்னத்தில் பெண்கள் ஆகிய நீங்கள் எல்லாம் வாக்களித்து எனக்கு ஆதரவு தர வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் அனைவரும் எனக்கு ஆசி வழங்க வேண்டும் என அணைத்து பெண்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story