டூவீலரை களவாடிய மர்ம நபர் - காவல்துறை வழக்கு பதிவு

டூவீலரை களவாடிய மர்ம நபர் - காவல்துறை வழக்கு பதிவு

காவல்துறை

இயற்கை அழைப்புக்கு சென்றவரின் டூவீலரை களவாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இயற்கை அழைப்புக்கு சென்றவரின் டூவீலரை களவாடிய மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வெள்ளியணை கிழக்கு மேட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் சக்திவேல் வயது 37. இவர் மார்ச் 23ஆம் தேதி மாலை 7 மணி அளவில், கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலையத்திற் குட்பட்ட,சீதப்பட்டி சர்வீஸ் சாலையில் தனக்கு சொந்தமான TN 47 AM 1573 என்ற எண் கொண்ட ஹீரோ ப்ளெண்டர் பிளஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், திடீரென இயற்கை அழைப்பு அழைத்ததால் தனது டூவீலரை சாலையோரம் நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை தீர்க்க சென்று விட்டார். வந்த வேலை முடிந்த பிறகு, மீண்டும் தனது டூவீலரை எடுக்க முற்பட்டபோது, டூவீலர் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது செல்போனை அந்த வாகனத்தில் உள்ள டேங்க் கவரில் வைத்திருந்தார். இதனால் தனது டூவீலருடன் செல்போனும் களவாடப்பட்டது கண்டு மேலும் அதிர்ச்சடைந்த அவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக டூவீலரின் மதிப்பு ரூபாய் 15,000 எனவும், அவரது செல்போன் மதிப்பு ரூபாய் 5000 எனவும் மதிப்பீடு செய்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, டூவீலரையும், செல்போனையும் களவாடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story