நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பு

காளியம்மாள்

மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் காளியம்மாள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலாடுதுறை சேர்ந்த காளியம்மாளை சென்னையில் அறிவித்துள்ளார் . 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டவர் மேலும் 2022 இல் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டவர், பேச்சு வன்மை மிக்கவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் நேர்பட பேசுவதில் கலந்து கொள்பவர் . மயிலாடுதுறை மாவட்ட மண்ணின் மகள் காளியம்மாளுக்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story