நம்மாழ்வார் நினைவு தினம்: டிராக்டர் பேரணி

நம்மாழ்வார்   நினைவு தினம்: டிராக்டர் பேரணி

பொதுகூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மயிலாடுதுறையில் நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் டிராக்டர் பேரணி மற்றும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குரு.கோபி கணேசன் தலைமையில் தஞ்சை செந்தில்வேலன், பொருளாளர் மதியழகன், செயலாளர் ராஜாராமன் உட்பட 500க்கும்மேற்பட்டோர் பேரணியில் விவசாயிகள் டிராக்டருடன் பங்கேற்றனர்.

பேரணியானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து சின்னக்கடை வீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. பாரதப் பிரதமரின் பயிர்காப்பீடு திட்டம் பல்வேறு முறைகேடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் உள்ளாவதால் அண்டை மாலத்தில் வழங்குவது போல் பின்ஏற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு பருவத்திறற்கும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story