பிப்.3ல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறன் தேர்வு

பிப்.3ல் 8ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு தேசிய  திறன் தேர்வு

பிப்.3ல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறன் தேர்வு

மயிலாடுதுறையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. அதன்மூலம், 1 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள் ஆவர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS- National Means Cum Merit Scholarship Scheme) தேர்வில் வெற்றி பெற்றால் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மொத்தம் ரூ.48 ஆயிரம் நிதி உதவி கிடைக்கும், அதற்கான தேர்வு சனிக்கிழமை பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2268 மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுதுகின்றனர்.

மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் மயிலாடுதுறை,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி கூறிநாடு,ரோட்டரி கிளப் மெட்ரிக் பள்ளி மயிலாடுதுறை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி குத்தாலம், சம்பந்தம் மேல்நிலைப்பள்ளி செம்பனார்கோயில், அரசு மேல்நிலைப்பள்ளி திருக்கடையூர், மற்றும் சீர்காழியில் சபாநாயகர் இந்து மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலகத்தில் பாதுகாப்பு வைக்கப்பட்டு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

Tags

Next Story