மயிலாடுதுறையில் 500க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி

மயிலாடுதுறையில் 500க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி
விழாவில் பங்கேற்றவர்கள்
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி விழா நடைபெறுகிறது

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று மயூரநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு பரதக்கலை வாயிலாக அஞ்சலி செலுத்தும் விழா மயூர நாட்டியாஞ்சலி ஆகும். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையினரால் நடத்தப்படும் விழா கடந்த 17ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது .

18ஆம் ஆண்டான இந்த ஆண்டு மார்ச் 7, 8, 9 ,10 ஆகிய நான்கு தினங்கள் மயூரநாட்டாயாஞ்சலி நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நாட்டியாஞ்சலியை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் மயிலாடுதுறை வர்த்தக சங்க தலைவர் மதியழகன், சிவலிங்கம் ரவிச்சந்திரன், தஞ்சை கலைப்பண்பாட்டு துறை செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story