ஊசியில் நூல் கோர்க்கும் போட்டி
நூல் கோர்க்கும் போட்டியில் பங்கேற்ற சிறுமியர்
மாரியம்மன் கோவில் தெருவில் ஊசியில் நூல் கோர்க்கும் போட்டி. இளம் பெண்கள், சிறுமியர் ஆவலுடன் பங்கேற்பு. பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நமது பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டுகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், தாந்தோணி மலை, மாரியம்மன் கோவில் பகுதியில் நண்பர்கள் நற்பணி மன்றம் 17 ஆம் ஆண்டு நடத்தும் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இளம் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கான ஊசியில் நூல் கோர்க்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்கும் இளம்பெண்கள் மற்றும் சிறுமியர் கையில் நூலுடன் சென்று ,சுமார் 50 மீட்டர் தொலைவில் நிற்கும் பெண்களிடம் ஊசியை வாங்கி நூல் கோர்த்து, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரவேண்டும்.
இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த போட்டியில் இளம்பெண்கள் மற்றும் சிறுமியர் சுறுசுறுப்புடனும், வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற இளம் பெண்களுக்கு நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான போட்டியும் நடைபெற்றது.