மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் ஆய்வு 

மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 4ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக (28.12.20)அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக அரசு பதவி ஏற்று கொண்டதும் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.114கோடி நிதி ஒதுக்கியது. அதன் கட்டுமான பணிகள் மன்னன்பந்தல் பால்பண்ணை என்ற பகுதியில் துவங்கியது.7 மாடிகளைக் கொண்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்பி இராமலிங்கம் , எம்எல்ஏ நிவேதா முருகன் , துறை அதிகாரிகளுடன் கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 4ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story