3 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு - மின்வாரியம் உத்தரவு.

தாழ்வழுத்த பிரிவில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது 3 நாட்களுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்சார சேவைகளை விரைந்து வழங்கும் வகையில் புதிய மின் விநியோக விதிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அதனை அமல்படுத்தி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த இடத்தில் இணைப்பு வழங்க, கூடுதல் மின் சாதனங்கள் நிறுவ அவசியம் இல்லாத பட்சத்தில் 3- நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

அதிகபட்சம் 7- நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் எனவும், மின் இணைப்பு வழங்க கம்பம் நிறுவ வேண்டும் எனில் 60 நாட்களும், ட்ரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் எனில் 90 நாட்களும் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மின் கட்டண விகித மாற்றம், குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றி தரும் சேவைகளுக்கு, கால அவகாசங்களும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் குறித்து பிரிவு அலுவலர்களுக்கு தெரிவித்து, தவறாமல் பின்பற்ற அறிவுறுத்துமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மின்வாரியம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பை கருத்தில் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது.



Tags

Next Story