ஜேசிஐ கரூர் டைமண்ட் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ஜேசிஐ கரூர் டைமண்ட்  அமைப்பின்  புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
X

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு 

ஜேசிஐ கரூர் டைமண்ட் அமைப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஹேமலா ஹோட்டலில், ஜே.சி.ஐ. கரூர் டைமண்ட் அமைப்பிற்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டனர். 126- நாடுகளில் செயல்படும் இந்த அமைப்பிற்கு ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ஜே.சி.ஐ. கரூர் டைமண்ட் தலைவராக C.விஜயன் செயல்பட்டு வந்தார். இவருடைய பதவி காலம் முடிந்ததை முன்னிட்டு இன்று அனுபர் பேப்ரிக்ஸ் உரிமையாளர் கே.எஸ்.சூர்யகுமார் 2024 ஆம் ஆண்டுக்கான தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த அமைப்பின் உலகத் தலைவர் கவின்குமார் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் ஜேசிஐ சென் நிலாமணி கணேசன் பங்கேற்று சிறப்பித்தார். அவருக்கு இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இன்று நடைபெற்ற விழாவில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு இந்த அமைப்பின் இலட்சியினை அணிவித்து சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டத்தில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொண்டனர்.

Tags

Next Story