புதிதாக அமைக்கப்பட்ட சாலை வெடிப்பு ஆய்வு

புதிதாக அமைக்கப்பட்ட சாலை வெடிப்பு ஆய்வு

மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் தெற்கு தெரு பாரதிநகரில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். 300 மீட்டர் தூரம் புதிய சிமென்ட் சாலை அமைத்து 2 மாதம் ஆன நிலையில் சிமென்ட் சாலையில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் சாலை தரமாக அமைக்காததால் சாலையில் வெடிப்பு ஏற்பட்டு ஜல்லிகற்கள் பெயர்ந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று புதிய சிமெண்ட் சாலையில் பெயிண்ட் அடிப்பதற்காக வந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி விரிசல்விட்ட சாலையை சரிசெய்து தந்துவிட்டு பணிகளை செய்யுங்கள் என்று திருப்பி அனுப்பினர். சாலை பணிகளை தடுத்ததாக தங்கள் மீது புகார் அளிப்பதாக பலர் மிரட்டுவதாக கூறிய பொதுமக்கள் சாலை தரமாக போடாதது குறித்து நாங்கள் கேட்காமல் யார் கேட்பார்கள் என்று கேள்வி எழுப்பினர். புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலையை ஆய்வு செய்து சீரமைத்துதர வேண்டும் என்றும் சிமென்ட் சாலையை சரிசெய்தபிறகு ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story