இரவோடு இரவாகத் தகர்கப்பட்ட நிழற்குடை- அமைதி காக்கும் நிர்வாகம்
தகர்த்து எறியப்பட்ட நிழற்குடை
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் காந்திஜி சாலை, பழைய சுந்தரம் திரையரங்கு முன்பாக பல ஆண்டுகளாக பேருந்து நிறுத்தும் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் குத்தாலம் கும்பகோணம் பகுதிக்கு செல்லும் பயணிகள் அங்கே நின்று பேருந்து ஏறி செல்வது வாடிக்கை . பயணிகள் மழையிலும் வெயிலிலும் பாதிக்கப்பட்டு பக்கத்து பக்கத்து கடைகளின் வாசலில் நின்று இருப்பதை கண்டு அப்ப பகுதியில், முன்னாள் எம்எல்ஏ அருள்செல்வன் சட்டமன்ற நிதியிலிருந்து நிழற் குடை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த நிழற்குடை பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் சென்ற மாதம் திடீரென்று இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டது . மேல் கூரை அருகில் உள்ள தனியார் இடத்தில் வீசப்பட்டுள்ளது. இதுவரை நெடுஞ்சாலைத்துறையோ,நகராட்சி மற்றும் எந்த நிர்வாகம் இந்த செயல் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலை நீடித்தால் மேலும் பல்வேறு அராஜகம் நடக்க வாய்ப்பு உள்ளது, ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.