காலை பனியில்லை , சாலை பணியால் துன்பம்

காலை பனியில்லை , சாலை பணியால் துன்பம்

புழுதி மண்டலம் 

மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் சாலை பணிகளுக்காக கொட்டப்பட்ட கான்கிரீட் கலவையால் புழுதி கிளம்பி பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கும்பகோணத்திலிருந்து சீர்காழி வரை (SH-64) மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணி கடந்த 2022ஆம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது‌. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே மல்லியம் மெயின்ரோட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு 1 கிலோ மீட்டர்தூரம் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறிய ஜல்லிகளுடன் ரெட்மிக்ஸ் கலவை கொட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து பணிகள் நடைபெறாததால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதால் ஏற்படும் புழுதியால் காற்று மாசுபாடு அடைவதாகவும், சிமென்ட் கலவை கலந்த புழுதி பறந்து மரங்கள் மற்றும் வீட்டிற்குள் படிவதால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாகவும் தார் சாலை போடும் வரை இரண்டு வேளையும் சாலையில் புழுதி பறக்காமல் தண்ணீர் தெளிக்க ஒப்பந்தக்காரரரிடம் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.

அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ரெட்மிக்ஸ் கலவை கொட்டப்பட்டு சாலை வழுவான நிலையில் இருகுவதற்காக வேலை நிறுத்தப்படதாகவும் இரண்டு நாட்களில் தார்கலவையுடன் தார்சாலை அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story