பான் கார்டு எண் சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை: நிம்மதி அடைந்த ஓய்வூதியர்கள்

பான் கார்டு எண் சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை: நிம்மதி அடைந்த ஓய்வூதியர்கள்

தாலுகா அலுவலகம்

பான் கார்டு எண் சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை என தெரிவித்துள்ளதால், நிம்மதி அடைந்த ஓய்வூதியர்கள்.

தமிழக முழுவதும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள ஓய்வூதிய அலுவலகம் மற்றும் 37 மாவட்ட கருவூலங்கள் வழியாக தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர். தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து புதிய நடைமுறைப்படி வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டுமா? அல்லது பழைய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா? என்ற விவரத்தையும்,

ஓய்வூதியர்களின் பான் கார்டு எண்ணையும் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் 15ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கருவூலத்துறை மாவட்ட அலுவலர்களுக்கு விதித்து உத்தரவு விட்ட செய்திகள் செய்திகளில் வெளியானது.

தற்போது, அது போன்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என கருவூல கணக்கு விஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, கரூரில் உள்ள ஓய்வூதியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story