திருநங்கைகளுக்கு பரிசுகள் கூடிய அசைவ உணவு
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கு கறி விருந்து அளித்து பரிசு தொகுப்பு திமுக மாவட்ட இளைஞர் அணி வழங்கியது.
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா மாவட்ட இளைஞர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சர்வோதயன் ஏற்பாட்டில், மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மயிலாடுதுறையில் வசிக்கும் அனைத்து திருநங்கைகளுக்கும் கறி விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
முன்னதாக திருடங்கைகளுக்கு டிராவல் பேக், புடவை, இனிப்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகப்பினை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ, மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுதா ஆகியோர் வழங்கினர்.