தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற வட மாநிலத்தவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற வட மாநிலத்தவர் கைது

 புகையிலைப் பொருட்கள்

கரூரில் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற வட மாநிலத்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூரில் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற வட மாநிலத்தவர் கைது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஜூலை 12ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், கரூர் நகரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது புது தெருவில் செயல்படும் நாராயணன் டீ கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. அந்த கடையில் விற்பனைக்கு வைத்திருந்த விமல் பாக்கு 16 பாக்கெட்டுகளும், V1 புகையிலை 30 பாக்கெட்டுகளும், ஜபாரி பான்மசாலா 10 பாக்கெட்களும், 2 கோல்டு புகையிலை 10- பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்,இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வயது 29 என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story