மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து மறியல் போராட்ட அறிவிப்பு

போராட்டம் அறிவிப்பு
மயிலாடுதுறையில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்காக நகரின் மையப்பகுதியில் 26,500 சதுரஅடி இடத்தை நகராட்சி அளிக்க ஒத்துக்கொண்டதில் பின்னடைவு போராட்ட அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மைய நூலகம் அமைக்க தமிழக அரசு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்காக, மயிலாடுதுறை நகரில் 26,500 சதுர அடி இடம் ஒதுக்க மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. தருமை ஆதீன மகப்பேறு மருத்துவ மனை வளாகத்தில் இடம் கேட்டனர் அதை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.
ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நகராட்சி இடத்தில் இடம் ஒதுக்கியது அதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.நகரின் பிரதான பகுதியில் இடம் இல்லை என நகராட்சி கைவிரித்துவிட்டது. திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் தலைமையில் , திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மதிமுக, தமிழர் தேசிய முன்னணி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் நகராட்சியை எதிர்த்து போராட்டத்திற்கு நாள் குறித்தனர்.
இதுகுறித்து கடந்த 2023டிசம்பர்30ஆம் தேதி அன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் . , மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட தற்காலிக புதிய பேருந்து நிலைய ,இடம் போதுமான இடவசதி உள்ளதால் மாவட்ட மைய நூலகம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் ஒத்துக் கொண்டது.
இதனால் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது ( இந்த செய்தி நமது King24x7 ஆப்பில் 31டிசம்பரில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது) ஆனால் நகராட்சி நிர்வாகம் இடம் அளிப்பதற்கான எந்த மேல் நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்காததை கண்டித்து வரும் 21ஆம் தேதி அன்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு அறிவித்து ள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
