என்.பி.கே .ஆர். ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறக்க கோரிக்கை
மனு அளித்த பாமகவினர்
மயிலாடுதுறை மாவட்திற்கு அரசு தொழிற்பயிற்சி மையம். விவசாயிகள் அல்லாதோர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இயக்குநர் களாக வருவதை தடைசெய்து, நிலம் உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்குவது போல், விவசாயிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டியும்.
பல மாதங்களாக நியமிக்கப் படாமல் உள்ள மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் MRI ஸ்கேன் மருத்துவர் நியமனம் செய்ய வேண்டியும். தலைஞாயிறு NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டியும். கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாழாகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டியும் கோரிக்கை. குழுவில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மைலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சிவக்குமார்.பா.ம.க.வடக்கு மாவட்ட செயலாளர் அவர்களின் வழியாக கோரிக்கை அளிக்கப்பட்டது.
இதில் சித்தமல்லி ஆ.பழனிசாமி , நான் விமல், ராஜா பா.ம.க நகர செயலாளர் , ரவி சேதுராயர் , தேசிங்கு சேத்திரபாலபுரம் நகர் மன்ற உறுப்பினர்கள் காந்தி, சிட்டி செந்தில் ஆனந்த ராஜ்,செ. பாம்பே சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.