கரூரில் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கரூரில்,இளைஞர்களுடன் ஷட்டில் காக் விளையாடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா.வாக்கு சேகரித்தார்.
கரூரில்,இளைஞர்களுடன் ஷட்டில் காக் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் கருப்பையா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று மண்மங்களம், மேதி நகர், மேக்கூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பிரச்சார வாகனத்தில், கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். மேதி நகருக்கு வந்த வேட்பாளர் கருப்பையா கிராமத்தில் இருந்த பெரியவர்களிடம் தனது மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். பள்ளிகள் விடுமுறை தினம் என்பதால், அப்போது அப்பகுதியில் சிறுவர்கள், இளைஞர்கள் ஷட்டில் காக் விளையாடிக் கொண்டிருந்தனர். வேட்பாளர் கருப்பையா அங்கு சென்று அவர்களுடன் ஷட்டல் காக் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தியதுடன் இளைஞர்கள் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story