சிறுதானிய கண்காட்சியை பார்வையிடாமல் பரிசளித்த அதிகாரிகள்

சிறுதானிய கண்காட்சியை பார்வையிடாமல் பரிசளித்த அதிகாரிகள்

மயிலாடுதுறையில் நடந்த சிறுதானிய உணவு திருவிழாவில், அதிகாரிகள் முறையாக கண்காட்சியை பார்வையிடாமலேயே பரிசளித்ததால் பலரும் விழாவை புறக்கணித்து சென்றனர்.  

மயிலாடுதுறையில் நடந்த சிறுதானிய உணவு திருவிழாவில், அதிகாரிகள் முறையாக கண்காட்சியை பார்வையிடாமலேயே பரிசளித்ததால் பலரும் விழாவை புறக்கணித்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச சிறுதானிய ஆண்டு உணவு திருவிழாவின்போது சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து காட்சிபடுத்தியிருந்தனர். சிறந்த சிறுதானிய உணவு கண்காட்சி அமைத்தவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரொக்க பணம் மற்றும் பரிசுகளை வழங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அங்கன்வாடி பணியாளர்கள் 10த்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளை காட்சிபடுத்தியிருந்த நிலையில் சிறந்த சிறுதானிய உணவு கண்காட்சியை தேர்ந்தெடுத்த அதிகாரிகள் தங்கள் உணவு வகைகளை பார்க்காமலேயே சென்று பரிசு அறிவித்ததால் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் வெளியேறினர். தொடர்ந்து நிகழ்ச்சி முடிவடைந்து வெளியே வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story