பிரியாணி கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை

பிரியாணி கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை

மயிலாடுதுறையில் அசைவஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் உட்பட இருவர் மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையில் புகார் கூறப்பட்டது.


மயிலாடுதுறையில் அசைவஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் உட்பட இருவர் மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையில் புகார் கூறப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி கச்சேரி சாலையில் நகராட்சி வணிக வளாகத்தில் பாய் வீட்டு கல்யாண பிரியாணி கடை உள்ளது. வளாகத்தின் மாடி படியையும் ஆக்கிரமித்து உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின்பேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். நகராட்சி நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த அசைவ பிரியாணி ஹோட்டலில் ஆய்வுக்கு சென்றனர்.

ஹோட்டலில் உள்ளே நுழைந்தபோதே கொக்கியில் பிளாஸ்டிக் பைகள் மாட்டியிருந்ததை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா கைப்பற்றினார். கடையில் இருந்த பிளாஸ்டிக் பையை சுகாதார ஆய்வாளர் பிருந்தா எடுத்து கையில் வைத்திருந்ததை கடை ஊழியர் பிடிங்கியபோது கொக்கி மோதிரத்தில் மாட்டியதால் அலறியுள்ளார். இதனை பார்த்த நகரமைப்பு பிரிவு உதவியாளர் முருகராஜ் வந்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஹோட்டல் நிர்வாகத்தினர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படும் நபர்கள் சமரசம் பேச நகராட்சிக்கு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். தொடர்ந்து பணியில் இருந்த அதிகாரிகளை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நகராட்சி முன்பு நகராட்சி துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியாணி கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க அதிகாரிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். நகராட்சி அதிகாரிகள் காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாகவும் காரணமில்லாமல் கடையை பூட்டி சீல் வைப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து சீல் வைப்பதற்கு அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவியது. மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா, துணை கண்காணிப்பாளர் திருப்பதி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உணவு பொருளை சோதனைக்கு நகராட்சி அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர். சோதனை அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகளை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். பிரியாணி கடையில் குவிந்த கூட்டம் கலைக்கப்பட்டது.

Tags

Next Story