கட்டடம் கட்டியும் திறக்காத அதிகாரிகள்; சீர் வரிசையுடன் வந்த மாணவர்கள்!

கட்டடம் கட்டியும் திறக்காத அதிகாரிகள்; சீர் வரிசையுடன் வந்த மாணவர்கள்!

ஆசானபுதூர் அரசுப் பள்ளி கட்டடம் கட்டியும் அதிகாரிகள் திறக்காத நிலையில், சீர் வரிசையுடன் வந்த மாணவர்கள் பள்ளியை திறந்தனர்.

ஆசானபுதூர் அரசுப் பள்ளி கட்டடம் கட்டியும் அதிகாரிகள் திறக்காத நிலையில், சீர் வரிசையுடன் வந்த மாணவர்கள் பள்ளியை திறந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஆசானபுதூர் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காமராஜர் துறைமுக சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15.60 லட்சம் மதிப்பில் அரசு பள்ளி கட்டடம் மற்றும் 7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் சமையலறை கட்டடங்கள் கட்டப்பட்டது.

ஆனால் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த கட்டங்கள் திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவில்லை. இந்த கட்டடங்களை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதும், கட்டடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் அந்தப் பள்ளி கட்டடத்தை கிராம மக்களே திறக்க முடிவு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்வரிசை தட்டுகளுடன் மேளதாளம் முழங்க தெருக்களில் ஊர்வலமாக பள்ளிக்கு வருகை தந்தனர். தொடர்ந்து பள்ளி கட்டடத்தை குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்தனர். இதனால் கிராம மக்கள், மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்த போது, பள்ளி ஆசிரியர்கள் அவர்களை வரவேற்கும் விதமாக தாம்பூல தட்டில் ஆரத்தி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பள்ளிக்கட்டடம் திறக்கப்பட்டுள்ள போதும், இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் அதனை விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story