தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற மூதாட்டி கைது.

கரூரில்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற மூதாட்டி கைது.

கரூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூதாட்டி கைது செய்யப்பட்டு, ரூ 14,419 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான கூல்லிப், விமல் பாக்கு, வி1 பாக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 26ம் தேதி மதியம் 3 மணிக்கு, கரூர் நகர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சின்ன ஆண்டாங்கோயில், பெரியசாமி நகர், ஒத்த பனைமர தெரு பகுதியில் உள்ள டீ ஸ்டாலில் ஆய்வு மேற்கொண்ட போது, ரகசியமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது தெரிய வந்தது.

எனவே, கடைக்குள் சென்று சோதனை செய்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த கூல் லிப் 45 பாக்கெட்டுகளும், விமல் பாக்கு ஏழு பாக்கெட்டுகளும், வி1 பாக்கு 22 பாக்கெட்டுகளும், ஹான்ஸ் 25 பாக்கெட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 14,419 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இந்த விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளர் சுசீலாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story