யார் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதை பெரும் முதலாளிகள் தான் தீர்மானிக்கின்றனர்

யார் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதை பெரும் முதலாளிகள் தான் தீர்மானிக்கின்றனர்
ஆலோசனை கூட்டம்
கரூரில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில், அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ரவிஸ் மினி மஹாலில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில், அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதர் மார்க் எனப்படும் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளப்பட்டி நகர துணை தலைவர் ஜாபர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். அப்போது, தமிழக அரசியலாகட்டும், இந்திய அரசியலாகட்டும், யார் பிரதமராக வேண்டும்? யார் முதலமைச்சராக வேண்டும்? யார் அமைச்சராக வேண்டும்? என்பது உள்பட, வாக்களிக்கும் உரிமை நமக்கு இருந்த போதும், பெரும் முதலாளிகளாக இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் அதனை தீர்மானிக்கின்றனர். எனவே நாம் விழிப்புடன் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என விளக்கி கூறினார்.

Tags

Next Story