சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

பொள்ளாச்சி..மே..10 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.. இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100.க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதுமானது..

கடந்த ஆறு மாத காலமாக கடும் வரட்சி நிலவி வந்த சூழலில் பல லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விலைக்கு வங்கி பயிரிட்ட வாழை மரங்களை காப்பாற்றிய விவசாயிகள் நேற்று நள்ளிரவு வீசிய சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு விளை நிலைகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story