பெண்கள் மட்டுமே நடராஜரை பல்லக்கில் தூக்கும் வழிபாடு
மயிலாடுதுறை அருகே கடலங்குடியில் பெண்பக்தர்கள் மட்டுமே நடராஜர் சுவாமியை பல்லக்கில் வைத்து தூக்கிச் சுமக்கும் வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை அருகே கடலங்குடியில் பெண்பக்தர்கள் மட்டுமே நடராஜர் சுவாமியை பல்லக்கில் வைத்து தூக்கிச் சுமக்கும் வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை மாங வாணாதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் ப அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடராஜரை பல்லக்கில் வைத்து தூக்கும் வைபவத்தை பெண்கள் மட்டுமே நடத்துவர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது. பெண்கள் பல்லக்கில் தூக்கிக்கொண்டு கோவிலில் பிரகாரங்களில் சுற்றி ஊர்வலமாக வந்தனர் மேலும் ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story