ஜல்லிக்கட்டு அரங்கு திறப்பு - காணொளி காட்சியில் ரசித்த மாணவர்கள்

ஜல்லிக்கட்டு அரங்கு திறப்பு - காணொளி காட்சியில் ரசித்த மாணவர்கள்

காணொளி காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள் 

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கை முதலமைச்சர் திறந்த வைத்த காணொளி காட்சியை மயிலாடுதுறை மாணவர்கள் கண்டு ரசித்தினர்
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. எனினும், இங்கு பார்வையாளர்கள் முறையாக அமர்ந்து போட்டிகளைப் பார்க்க போதிய கேலரி வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு போன்றவை இல்லை. இதனால், பலமுறை பார்வையாளர்கள் காளைகள் முட்டி உயிர் இழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைகின்றனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்க முடிவுசெய்யப்பட்டது. ரூ.64 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட அரங்க கட்டப்பட்டது இவ்வரங்கனை தமிழக முதல்வர் இனத்திறந்து வைத்தார் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி நகர் குண்டாமணி செல்வராஜ் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தனர்.

Tags

Next Story