கரூரில் பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 15- வது கிளை திறப்பு


பூர்விகா அப்ளையன்ஸ்
கரூர் - கோவை சாலையில், கே வி ஆர் வணிக வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பூர்விகா அப்ளையன்ஸ் 15 வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர இருபால் நடன கலைஞர்களின் குத்தாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு அதிரடி சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்று தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டினர். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசுகையில், மொபைல் போன் என்றாலே தமிழர்கள் மனதில் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது பூர்விகா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 20ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 475- க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது டி.வி.,பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தரத்துடன் விற்பனை செய்ய, பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனம் கரூரில் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், பூர்விகா நிறுவனத்தை நம்பர்-1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த பூர்விகா அப்ளையன்ஸ் 15- வது ஷோரூம் கரூரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது என்றார். உலகத் தரம் வாய்ந்த வீட்டு உபயோக பொருட்கள் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 100 ஷோரூம் என்ற மைல் கல்லை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார். பூர்விகா அப்பளையன்ஸ் திறப்பு விழாவையொட்டி மொபைல் போன் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தவணை முறையில் பொருட்களை வாங்குபவருக்கு 1 மாத இ.எம்.ஐ. இலவசம். ரூ.10,000 எக்சேஞ்ச் போனஸ், வாங்கும் பொருட்களின் மதிப்பு அடிப்படையில் ரூ.20 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு வாங்கப்படும் வீட்டுக்கு உபயோக பொருட்கள் இலவசமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன. வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது. ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கோல்டன் வவுச்சர் வழங்கப்படுகிறது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 9 வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய ரூ.79,854-மதிப்புள்ள கல்யாண காம்போ, ரூ.48,990-க்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.


