குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

மனு அளிக்க வந்த பொது மக்கள் 

மயிலாடுதுறையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் புதிதாக செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த தெருவில் ஏற்கனவே 200 மீட்டர் இடைவெளியில் மூன்று செல்போன் கோபுரங்கள் இருக்கும் நிலையில், அந்த கோபுரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அங்கு புதிதாக மற்றும் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதாலும், மரங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் அங்கு செல்போன் கோபுரம் அமைந்தால் முதியவர்கள் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியின் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்து வலியுறுத்தினர்.

Tags

Next Story