கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பகலில் வெப்ப அலை வீசி வரும் வேளையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தீவிர வெப்ப அலைக்கான "ஆரஞ்சு"எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைகளில் கானல் நீர் அதிக அளவில் வெளிப்படுவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வெயில் உச்சம் பெற்ற வேளையில் செல்லாமல் தவிர்க்க வேண்டும். பொதுவாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மே நான்காம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் எனவும், மேலும் தமிழ்நாட்டில் வெப்ப அலை தீவிரமடையும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Tags

Next Story