ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா

ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில்  ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில்  ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானபுரீஸ்வரர் ஆலயயத்தின் பெருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளன்று வெள்ளி ரிஷப மற்றும் மயில் வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசன காட்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முன்பு ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிச் செய்யப்பட்டனர். தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆதீனம் வடம் பிடித்து சகோபுர தரிசன காட்சியை தொடங்கி வைத்தார். பஞ்ச மூர்த்திகள் ஆதீன மாட வீதிகளில் வலம் வந்தது. பொதுமக்கள் வீடுகள்தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story