துணை ராணுவபடை வீரர்கள் கொடி அணிவகுப்பு

துணை ராணுவபடை வீரர்கள் கொடி அணிவகுப்பு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் மயிலாடுதுறையில்  துணை ராணுவபடை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் மயிலாடுதுறையில்  துணை ராணுவபடை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற 19.04.2024 ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் போது பொதுமக்கள் எவ்வித அச்ச உணர்வின்றி வாக்களிக்கும் வகையில் இன்று மாலை மயிலாடுதுறையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவசங்கர் (Cyber Crime) தலைமையில் மயிலாடுதுறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அருணா பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கிய அணிவகுப்பு பேரணியானது காந்திஜி ரோடு, கச்சேரி ரோடு, கலைஞர் காலனி மற்றும் பட்டமங்கலத் தெரு வழியாக கால்டாக்ஸ் அருகில் முடிவுபெற்றது. இதில் 115 பேர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story