விஜயதசமியன்று நூற்றுக்கணக்கான குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்

விஜயதசமியன்று நூற்றுக்கணக்கான குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


விஜயதசமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் சேர்த்தனர்

மயிலாடுதுறையில் விஜயதசமியை முன்னிட்டு தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை; தாம்பாளத்தில் நெல் பரப்பி, தமிழின் முதல் எழுத்தான 'அ'கரம் எழுத கற்றுக் கொடுத்தனர், இந்நிலையில் மாணவர் சேர்க்கையை முன்னிட்டு சில்வர் ஜூபிலி நிர்வாகம் மாணவர்களுக்கு ரெயின் கோட் கொடுத்து வரவேறனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. பள்ளியில் சரஸ்வதி சிலையை வைத்து மாலை அணிவித்து, பழங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வைத்து மாணவர்கள் நன்கு கல்வி கற்க வேண்டி சிவாச்சாரியார் வேதமந்திரம் ஓதி படையலிட்டு வழிப்பாடு நடத்தினர்.

குழந்தைகளை அழைத்து பெற்றோரின் மடியில் அமர்த்தி ஆசிரியர்கள் குழந்தைகளின் கை பிடித்து, தாம்பாளத்தில் நெல் பரப்பி தமிழின் முதல் எழுத்தான 'அ'கரத்தை மூன்று முறை எழுத கற்றுக் கொடுத்து கல்வியை தொடங்கி வைத்தனர். தருமபுரம் அரசு உதவி பெறும் குருஞானசம்பந்தர் பள்ளிக்கு வந்த மாணவர்களை தருமபுர ஆதீன மடத்திலிருந்து யானை குதிரை மூலம் வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று மாணவர் சேர்க்கையைநடத்தினர்

Tags

Next Story