பாஜ., வேட்பாளர் செந்தில்நாதனுக்கு கட்சியினர் வாழ்த்து

கரூர் பாஜ., வேட்பாளர் செந்தில்நாதனுக்கு கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்நாதன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி மேலிடம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இன்று, கரூர் - மதுரை சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கரூர் பாராளுமன்ற வேட்பாளர் செந்தில் நாதனை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், கட்சி அலுவலகம் தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags

Next Story