கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

கருவூர் திருக்குறள் பேரவையின் 38 ஆம் ஆண்டு விழாவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டத்து.

கருவூர் திருக்குறள் பேரவையின் 38 ஆம் ஆண்டு விழாவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட நகரத்தார் மண்டபத்தில் கருவூர் திருக்குறள் பேரவையின் 38 ஆம் ஆண்டு விழா பேரவையின் தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் மேடை பழனியப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் விரைவில் அரசு பள்ளிகளில் திருவள்ளுவர் மன்றம் துவக்கிட ஆணையிட்டு குரல் பரப்ப வேண்டும் எனவும், இலக்கிய திறனறிவு தேர்வு போல, திருக்குறள் திறனறிவு தேர்வு 6,7,8- வகுப்புகளுக்கு நடத்தி, தேர்ச்சி பெற்றோருக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

பாட நூல்களோடு திருக்குறள் உரைவளம் நூல் திருக்குறள் - வீ. முனுசாமி, இளங்குமரனார் போன்றோரின் நூல்களை இலவசமாக வழங்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் உள்ள, தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கு, அரசு உரிய ஏற்புடன் உதவிகள், விருதுகள் வழங்க வேண்டும்.

மாணவர்கள் தமிழ் பெயர் வைக்கும் கலாச்சாரம் குறைந்து வருவதை தடுக்க, பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன் நடைமுறைகளை எளிதாக்கி, தமிழ் பெயர் மாற்ற அரசு முன்வர வேண்டும். மாவட்ட தலைநகர்களில் பொதுவெளியில் அனைவரும் கொண்டாட திருவள்ளுவர் சிலை அரசு அமைக்க வேண்டும். நீண்ட நாள் தொடர் கோரிக்கையான,

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, முனைப்புடன் செயல்பாட்டை அரசு துரிதப்படுத்த வேண்டும். திருவள்ளுவர் விருதினை மாவட்டத்திற்கு ஒன்று என்று விரிவாக்க வேண்டும். கரூர் என்பது பொருளற்ற பெயர்.

கருவூர் என்பதே சரி. எனவே, கருவூர் மாவட்டம் என அரசு பெயர் திருத்தம் செய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story