சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 500 பக்தர்கள் பாதயாத்திரை
பாதயாத்திரை
மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி ஸ்ரீ சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் சார்பில் 24 ஆம் ஆண்டாக இன்று பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக உலகப் புகழ் பெற்ற மயிலாடுதுறை காவரி துலா கட்டம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஒன்றிணைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருள செய்து சக்தி கரகம் மற்றும் மாலை அணிந்து மஞ்சள் உடை உடுத்தி விரதம் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் உரிமி மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் பாதயாத்திரை புறப்பட்டனர்.
Next Story