பெந்தகோஸ்தே சபை பாதிரியார் கற்பழிப்பு வழக்கில் கைது

கைதானவர்
மயிலாடுதுறை அருகே திருவாளபுத்தூர் புத்தகரம் மேல தெருவில் பிலிப் விஜயேந்திரன் (58 ) என்பவர் தமக்கு சொந்தமான G.S.R.M பெந்தகோஸ்த்த என்ற கிருத்துவ சபையின் பாஸ்ட்டராகப் பணியாற்றி வருகிறார். அவரது சர்ச்சுக்கு அடிக்கடி வரும் 38 வயதுடைய ஒரு பெண்மீது கண் வைத்துள்ளார்.
சம்பவ தினத்தன்று பெண்மணி தன் காலில் உபாதை இருந்ததாக தெரிவித்துள்ளார். சர்ச்சை ஒட்டியுள்ள வீட்டுக்கு செல் நான் வந்து மந்திரித்த எண்ணெயை தடவி விடுகிறேன் என தெரிவித்துள்ளார். அதேபோல் பெண்மணி வீட்டிற்குள் சென்றபோது அங்கு வந்த பாதிரியார் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு காலில் எண்ணெய் தடவியுள்ளார்.
அத்துடன் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இதை யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் உன்னை தொலைத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்டப் பெண் அங்கிருந்து பயந்து சென்று கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறி அழுதுள்ளார் . கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
புகாரரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி, நடைபெற்ற சம்பவம் உண்மை என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டார். GSRM பெந்தகோஸ்தே சபை பாதிரியார் பிலிப் விஜயேந்திரன்(58) மீது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு சர்ச் பாதிரியார் தன் சபைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த செயல் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (பாதிரியாருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைகள் உள்ளது) தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாக கூறி மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி ஓய்ந்து நிலையில் ஒரு கிருத்துவ பாதிரியார் தன் சபைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது மயிலாடுதுறையில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
