தார் ரோடு அமைக்கக்கோரி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

தார் ரோடு அமைக்கக்கோரி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள், சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தார் சாலை அமைக்கக்கோரி ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி எம்.எம்.ஜி., எம்.எஸ்., எம். எம்., காலனி சேர்ந்த மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.. பொள்ளாச்சி.மார்ச்.11 பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட எம் எம் ஜி எம் எஸ் எம் எம் காலணியில் 50 வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் கொண்டும் குண்டும் குழியுமாக இருந்ததால் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தார் சாலை போடாமல் இருப்பதாக கூறி இன்று அப்பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தார் சாலை போடாமல் இருப்பதால் அன்றாடம் அவ்வழியாக பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும்,இரவு நேரத்தில் அவ்வழியாக அச்சமாக இருப்தாகவும், மழைக்காலங்களில் முற்றிலும் இந்த சாலையை பயன்படுத்தும் முடியாத நிலை இருப்பதால் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முற்றுகையிட்டு பொதுமக்கள் தெரிவித்தனர் .


Tags

Next Story