மயிலாடுதுறையில் காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல்
பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள்
மயிலாடுதுறை நகராட்சிக்கு கொள்ளிடம் ஆற்றில் முடிகண்டநல்லூர் என்னும் இடத்தில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு மயிலாடுதுறை மக்களுக்கு தினமும் காலை ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார்கள் பழுதடைந்த காரணத்தால் கடந்த 17ஆம் தேதி முதல் நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக மயிலாடுதுறை நகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
போதிய குடிநீர் வழங்காத காரணத்தால் பாதிப்படைந்த பொதுமக்கள் மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் கண்ணார தெரு என்ற இடத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் செய்தவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இன்று பிற்பகலுக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்
என்றும் அதுவரை டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.